மண் அள்ளிய வாகனங்கள் சிறைப்பிடிப்பு


மண் அள்ளிய வாகனங்கள் சிறைப்பிடிப்பு
x
திருப்பூர்


திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சி நொச்சிப்பாளையத்திலிருந்து மீனாம்பாறை செல்லும் வழியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் லாரி மற்றும் பொக்லைன் பயன்படுத்தி மண் அள்ளப்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் வாகனங்களை சிறை பிடித்து கரைப்புதூர் ஊராட்சி நிர்வாகித்திடமும் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வார்டு உறுப்பினருக்கும் தகவல் தெரிவித்தனர். கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கவுரி மற்றும் வார்டு உறுப்பினர் சுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மண் அள்ளியது சாலை போடும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் என்றும் சாலை போடும் பணிக்காக மண் எடுத்ததாகவும் தெரிந்தது. இதை அடுத்து சிறை பிடிக்கப்பட்ட வாகனங்கள் விடுவிக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் நொச்சிப்பாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

---


Next Story