முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்டதாக பா.ஜ.க. பிரமுகர் கைது


முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்டதாக பா.ஜ.க. பிரமுகர் கைது
x
திருப்பூர்


திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக இருப்பவர் ரைட்டர் வினித்குமார் (வயது 24). தாராபுரத்தில் வசித்து வரும் இவர் தனது முகநூல் பக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றியும், தமிழக காவல்துறையை பற்றியும் அவதூறாக கார்ட்டூன் படத்துடன் பதிவிட்டதாக புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ரைட்டர் வினித்குமாரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பதிவிட்டதாக பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பா.ஜ.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story