பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது தகராறு: வாலிபர்களுக்கு கத்திக்குத்து; 5 பேர் கைது


பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது தகராறு: வாலிபர்களுக்கு கத்திக்குத்து; 5 பேர் கைது
x

பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து விழுந்தது. இது ெதாடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை


பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து விழுந்தது. இது ெதாடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கத்திக்குத்து

மதுரை கீரைத்துறை மேலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 28), பிளம்பர். இவர் தனது நண்பர் நெல்பேட்டை சுங்கம்பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ேஷக்முகமதுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றார்.அங்கு அவரது நண்பர்கள் சீனிஅபு, கபீர், ஷேக்இப்ராகிம், காதர், சாகர் உள்ளிட்ட பலர் காத்திருந்தனர். அந்த நேரத்தில் 2 மோட்டார் சைக்கிளில் 6 பேர் சத்தம் போட்டு கொண்டு அந்த வழியாக வந்தனர். அவர்களை சத்தம் போடாமல் செல்லுமாறு ராஜகோபால் உள்ளிட்ட சிலர் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் தகராறு செய்தனர்.

மேலும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜகோபால், ஷேக்இப்ராகிம் ஆகியோரை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓ்டி விட்டனர்.

5 பேர் கைது

இதில் காயம் அடைந்த அவர்கள் இருவரையும் நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விளக்குத்தூண் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்பேட்டையை சேர்ந்த ரியாஸ் (22), முகமதுஅன்சாரி (27), மேலமாசிவீதி ஆகாஷ் (22), ஆரப்பாளையம் விக்னேஷ்வரன் (21), விளாங்குடி பாலா (20) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் தெற்குவாசல் விக்ரம் ராஜ் என்பவரை தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story