ஆயுதப்படை உபகரணங்களை போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு


ஆயுதப்படை உபகரணங்களை போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு
x

ஆயுதப்படை உபகரணங்களை போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு செய்தார்.

அரியலூர்

மாவட்ட ஆயுதப்படையில் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் நேற்று வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டார். அப்போது அவர் ஆயுதப்படை போலீசாருக்கு வழங்கப்பட்ட உபகரணங்களை ஆய்வு செய்தார். போலீசார் பயன்படுத்தி வரும் வாகனங்களை தணிக்கை செய்தார். மேலும் போலீஸ் நிலையங்களில் செயல்பட்டு வரும் ரோந்து இருசக்கர வாகனங்களையும் ஆய்வு செய்தார். பின்னர் அவர் போலீசாரின் குறைகள் குறித்து கேட்டறிந்ததோடு, அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் சிறப்பாக செயல்பட்ட 15 போலீசாரின் பணியை பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார். முன்னதாக அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிசேகரன் (சைபர் கிரைம்), காமராஜ் (மது விலக்கு அமலாக்க பிரிவு), ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு மணவாளன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமாரி (தனிப்பிரிவு), பத்மநாபன் (ஆயுதப்படை) மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

1 More update

Next Story