பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
திருப்பூர்


குடிமங்கலம் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி வடக்கு ஒன்றிய தலைவர் குணசேகரன் தலைமையில் குடிமங்கலம் நால் ரோட்டில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பப் பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்க வேண்டும். குடிமங்கலம் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பொதுச் செயலாளர் வெள்ளிங்கிரி நிர்வாகிகள் செல்வராஜ், குமாரசாமி, ஜோதிமணி, மகுடீஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தெற்கு ஒன்றியதலைவர் மோகன்ராஜ் தலைமையில் பெதப்பம்பட்டி நால் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் துணைத்தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், விவசாய அணி நிர்வாகிகள், தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், கிளை தலைவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story