பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது


பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 July 2023 1:00 AM IST (Updated: 9 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகா கொப்பக்கரை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவி மாலையில் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பள்ளி மாணவியை கடத்தியதாக ராயக்கோட்டை அருகே சஜலப்பட்டியை சேர்ந்த பாலாஜி (வயது 23) என்பவரை கைது செய்தனர். மேலும் மாணவியை போலீசார் மீட்டனர்.


Next Story