மாவட்டத்தில்லாட்டரி, குட்கா, கஞ்சா விற்ற 8 பேர் கைது
கிருஷ்ணகிரி:
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். இந்த தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பின் போது, லாட்டரி சீட்டு விற்ற ராயக்கோட்டை பாஞ்சாலி நகரை சேர்ந்த செந்தில் (வயது 35), சூளகிரியை சேர்ந்த ராஜா (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் குட்கா விற்ற பூதிமுட்லுவை சேர்ந்த சுசீலா (50), பேகேப்பள்ளியை சேர்ந்த பாலு (42), சூளகிரியை சேர்ந்த திருப்பதி (32) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.700 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் கஞ்சா வைத்திருந்ததாக கோனேரிப்பள்ளியை சேர்ந்த விவேகானந்தன் (42), பண்டப்பள்ளியை சேர்ந்த கிருஷ்ணப்பா (55), கிருஷ்ணகிரியை சேர்ந்த 18 வயது நபர் என மொத்தம் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 160 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தளி போலீசார் பாரண்டப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய கக்கதாசத்தை சேர்ந்த நாராயணசாமி (33), மஞ்சுநாத் (32) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.