மது குடிக்க பணம் கேட்டுவிவசாயியை தாக்கிய மகன் கைது
நாமக்கல்
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியம் முள்ளுக்குறிச்சி அருகே உள்ள உறம்பு கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 75). விவசாயி. இவருடைய மகன் சரவணன் (45). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சரவணன் அடிக்கடி தனது தந்தையிடம் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று சரவணன் மது குடிக்க பணம் கேட்டார். ஆனால் பெரியசாமி பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சரவணன் தனது தந்தையை தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story