தளி அருகேசெல்போன் கோபுர ஜெனரேட்டர்களில் டீசல் திருடியவர் கைது
கிருஷ்ணகிரி
தேன்கனிகோட்டை:
தளி அருகே தேவர் உளிமங்கலம் பகுதியில் உள்ள செல்போன் கோபுர ஜெனரேட்டர்கள் தனியார் நிறுவனம் சார்பில் பராமரிக்கப்பட்டு டீசல் நிரப்பும் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஏ.மல்லாபுரம் பகுதியை சேர்ந்த மகாதேவன் மகன் விக்னேஷ் (வயது 24) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் செல்போன் கோபுர ஜெனரேட்டர்களில் டீசலை நிரப்பாமல் அதனை திருடி விற்பதாக தனியார் நிறுவன மேலாளர் சந்திரன் புகார் சென்றது.
இதுகுறித்து மேலாளர் தளி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் வழக்குப்பதிவு செய்து செல்போன் கோபுர ஜெனரேட்டர்களில் டீசல் திருடிய விக்னேசை கைது செய்தனர்.
Related Tags :
Next Story