இருதரப்பினர் மோதலில் 8 பேர் கைது


இருதரப்பினர் மோதலில் 8 பேர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2023 1:00 AM IST (Updated: 6 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே கோனேகவுண்டனூர் ஜெய்நகர் பகுதியை சேர்ந்த முனியப்பன் மகன் சூர்யா (வயது 18). இவர் கடந்த 3-ந் தேதி நாரலப்பள்ளி- சிந்தங்கம்பள்ளி சாலையில் மகராஜகடை அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நண்பர்களுடன் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது சிந்தகம்பள்ளியை சேர்ந்த 17 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளை சாலையில் நிறுத்தினார். அப்போது வழியில் இப்படி மோட்டார் சைக்கிளை நிறுத்தலாமா என சூர்யா தட்டி கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம்அடைந்த அப்பகுதியை சேர்ந்த வேலன் என்ற வேலு (40), வேணுகோபால் (31), அப்பு என்ற விஜய் (30) ஆகிய 4 பேர் சேர்ந்து சூர்யாவை தாக்கினார்களாம். இதனையடுத்து சூர்யா தனது உறவினர்களை அழைத்து கொண்டு சிந்தகம்பள்ளிக்கு சென்று 17 வயது சிறுவனின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதில் இருதரப்புக்கும் ஏற்பட்ட தகராறில் ஒருவரை தாக்கி கொண்டார்களாம்.

இதுகுறித்து சூர்யா தரப்பில் கொடுத்த புகாரின்பேரில் மகராஜகடை போலீசார் வேலன் என்ற வேலு, வேணுகோபால், அப்பு என்ற விஜய் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதேபோல் 17 வயது சிறுவன் கொடுத்த புகாரின்பேரில் சூர்யா, பிரசாந்த் (24), சம்பத் (48), முனியப்பன் ஆகிய 4 பேரை மகராஜகடை போலீசார் கைது செய்தனர்.


Next Story