வீட்டில் மது விற்றவர் கைது


வீட்டில் மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2023 7:00 PM GMT (Updated: 12 Aug 2023 7:00 PM GMT)
தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

இண்டூர் அருகே உள்ள ராமர்கூடல் கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 32). இவர் தனது வீட்டில் மது பதுக்கி விற்பனை செய்து வருவதாக இண்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இதில் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சத்யராஜை கைது செய்ததுடன் பதுக்கி வைத்திருந்த 31 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story