பர்கூர் அருகேசரக்கு வேனில் கடத்திய 1¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்டிரைவர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு


பர்கூர் அருகேசரக்கு வேனில் கடத்திய 1¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்டிரைவர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 28 Aug 2023 1:00 AM IST (Updated: 28 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

பர்கூர் அருகே சரக்கு வேனில் 1¾ டன் ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வாகன சோதனை

கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார் கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் அருகே உள்ள ஒரப்பம் 3 ரோடு பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடை கொண்ட 36 பைகளில் 1,800 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சரக்கு வேனை அரிசியுடன் பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் ராயக்கோட்டை அருகே உள்ள சிங்காரப்பேட்டை கிராமத்தை சேர்ந்த மாதேஷ் (36) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

வலைவீச்சு

மேலும் சரக்கு வேன் மற்றும் அரிசி மூட்டைகளின் உரிமையாளருமான கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை தசரதராம செட்டி தெருவை சேர்ந்த அஜீத் ஆகியோர் ரேஷன் அரிசியை ஒரப்பம், முருக்கம்பள்ளம், எலத்தகிரி பகுதிகளில் வீடு வீடாக சென்று குறைந்த விலைக்கு வாங்கி விற்க முயன்றது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story