கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 12 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்பனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா குட்கா, கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சூளகிரியில் நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினா். அவர் சூளகிரி ஏனுசோனையை சேர்ந்த சிவா (வயது30) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அதே போல காந்தி நகர் பகுதியில், கஞ்சா விற்ற ஓசூர் காந்தி நகரை சேர்ந்த சங்கர் (19) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
குட்கா விற்பனை
இதேபோல சிங்காரப்பேட்டை, கிருஷ்ணகிரி டவுன், கெலமங்கலம் பகுதியில் லாட்டரி விற்பனை செய்த சிங்காரப்பேட்டை கென்னடி நகர் செந்தில்குமார் (47), கிருஷ்ணகிரி தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் தெரு காமராஜ் (43), கெலமங்கலம் முருகேஷ் (50) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல சிங்காரப்பேட்டை, கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி, மகராஜகடை, ஓசூர், பேரிகை பகுதியில் மளிகை, பெட்டிக்கடைகளில் குட்கா விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
3 பேர் கைது
ஊத்தங்கரை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்த சூததாடிய போஸ் (39), பிரகாஷ் (39), மணி (34) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.