சமோசா கடை ஊழியர்களை தாக்கிய வழக்கில்மேலும் 3 பேர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு


சமோசா கடை ஊழியர்களை தாக்கிய வழக்கில்மேலும் 3 பேர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு
x

சேலத்தில் சமோசா கடை ஊழியர்களை தாக்கிய வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்

சேலம்

சேலத்தில் சமோசா கடை ஊழியர்களை தாக்கிய வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் அருகே மீனவர் காலனியை சேர்ந்தவர் அன்சர் அலி. இவர், சேலம் வாய்க்கால் பட்டறை பகுதியில் சமோசா கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் அவரது தம்பி அம்சத் அலி, ருக்குல்லா உள்பட 5-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் சமோசா டீ கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களது சமோசா கடைக்கு அல்லிக்குட்டையை சேர்ந்த சிலர் வந்தனர். பின்னர் அவர்கள் சமோசா வாங்கி விட்டு அதற்கு பணம் கொடுக்க மறுத்தனர். இதனால் கடை ஊழியர்களுக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் அம்சத் அலி, ருக்குல்லா ஆகியோரை தாக்கி கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில், காயம் அடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

3 பேர் கைது

இதுகுறித்த புகாரின்பேரில், அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவேந்திரன், சவுந்தரராஜன், மணிகண்டன், அரவிந்தராஜ், குகன்ராஜ், வீராணத்தை சேர்ந்த கிரி என்கிற சடையன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவான 5 பேரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், அல்லிக்குட்டையை சேர்ந்த சூர்யா (23), கிரி என்கிற மணிகண்டன் (23), கார்த்திக் (20) ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story