சிறையில் இருக்கும் போது மோதல்:சேலத்தில் ஜாமீனில் வந்தவரை வெட்டிய 3 பேர் கைது


சிறையில் இருக்கும் போது மோதல்:சேலத்தில் ஜாமீனில் வந்தவரை வெட்டிய 3 பேர் கைது
x

சேலம் மத்திய சிறையில் ஏற்பட்ட முன் விரோதத்தில், ஜாமீனில் வந்தவரை வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

சேலம்

சேலம் மத்திய சிறையில் ஏற்பட்ட முன் விரோதத்தில், ஜாமீனில் வந்தவரை வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிறையில் மோதல்

சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 27). இவரை ஒரு கஞ்சா வழக்கில் அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (28). ஒரு வழக்கில் கிச்சிப்பாளையம் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 2 பேரும் ஜாமீனில் வெளியில் வந்தனர்.

சிறையில் இருந்த போது யார் பெரியவர்? என்பதில் ஏற்பட்ட மோதலில் இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் இரவு, சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் நாராயண நகரை சேர்ந்த பிரேம்குமார் (22), பச்சப்பட்டியை சேர்ந்த கார்த்தி (22) ஆகிய 3 பேரும் சேலத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டு இருந்தனர்.

ஓட, ஓட வெட்டினர்

அப்போது அங்கு விஜய் நின்று கொண்டிருப்பதை பார்த்த, சூர்யா அவரை அழைத்து உள்ளார். விஜய் அங்கு சென்ற போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சூர்யா உள்பட 3 பேரும் சேர்ந்து அரிவாளால் விஜயை வெட்டினர். காயம் அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இருப்பினும் அவர்கள் அவரை ஓட, ஓட விரட்டி சென்று மீண்டும் வெட்டினர்.

இதில் தலை, கை, முதுகு உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜய்யை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து சூர்யா, பிரேம்குமார், கார்த்தி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் இருந்தவர்களிடையே நீயா?, நானா? என்ற கவுரவ பிரச்சினையில், வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டப்பட்ட சம்பவம் போலீசாரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story