மளிகை கடைக்காரரை தாக்கியவர் கைது


மளிகை கடைக்காரரை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 4 Oct 2023 1:00 AM IST (Updated: 4 Oct 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

மளிகை கடைக்காரரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே உள்ள காளிங்கவரத்தை சேர்ந்தவர் திம்மராஜ் (வயது 28). மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 1-ந் தேதி காரில் மடத்தூர் அருகே கொண்டிருந்தார். அப்போது 3 பேர் சாலையின் நின்று கொண்டிருந்தனர். இதை கவனித்த திம்மராஜ் ஹாரன் அடித்து அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினார். அப்போது அவர்கள் திம்மராஜூடன் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திம்மராஜ் கொடுத்த புகாரின்பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மடத்தூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (22) என்பவரை கைது செய்தனர். மேலும் ஆனந்தன் (25), தமிழரசன் (23) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செயது விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story