பேரிகை அருகேகாரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது


பேரிகை அருகேகாரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
x

பேரிகை அருகே காரில் கடத்திய கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

பேரிகை அருகே காரில் கடத்திய கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பேரிகை போலீசார் மாஸ்தி -பேரிகை சாலையில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 1¼ கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

கைது- பறிமுதல்

இதுகுறித்து போலீசார் கார் டிரைவர் மற்றும் உடன் வந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சூளகிரி தாலுகா காருபாலா சேர்ந்த ரங்கநாதன் (வயது39), பட்டா குருபரப்பள்ளியை சேர்ந்த உஜ்ஜினியப்பா என்கிற மஞ்சுநாத் (38) என்பது தெரிந்தது. மேலும் இவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து கார் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story