பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது


பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது
x

பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்செட்டி பைல்காடு மலைக்கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா. இவருடைய மனைவி மாதம்மாள் (வயது 38). இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த தொழிலாளியான முருகன் (40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மாதம்மாள் வளர்த்து வரும் மாடு, முருகன் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்தது. இதனால் ஏற்பட்ட தகராறில் முருகன், மாதம்மாளை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து அஞ்செட்டி போலீசில் மாதம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.


Next Story