திருச்செங்கோடு அருகே ரூ.2½ லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது


திருச்செங்கோடு அருகே  ரூ.2½ லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்  2 பேர் கைது
x

திருச்செங்கோடு அருகே ரூ.2½ லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது

நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு அருகே தோக்கவாடி ஊராட்சி முத்தநாயக்கன்பாளையம் பகுதியில் கந்தசாமி என்பவரது தறிப்பட்டறையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருச்செங்கோடு ஊரக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஊரக போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் உள்ளிட்ட போலீசார் நேற்று காலை கந்தசாமி பட்டறையில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வந்து பதுக்கி வைக்கப்பட்ட 18 மூட்டைகளில் சுமார் 240 கிலோ கொண்ட ரூ.2½ லட்சம் மதிப்புள்ள குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் தறிப்பட்டறை உரிமையாளர் கந்தசாமி, இதில் தொடர்புடைய தேவராசு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மொளசி அருகே உள்ள அக்கமாபாளையத்தை சேர்ந்த ராஜசேகர், கார்த்திக்குமார், சதீஸ், லோகநாதன் ஆகியோர் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலாவை வெளிமாநில பார்சல் லாரி மற்றும் லோடு வண்டியில் வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான 4 பேரரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story