354 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது


354 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது
x

354 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை

பேரையூர்,

மதுரை டி.ஐ.ஜி. பொன்னிக்கு கிடைத்த தகவலின் பேரில், டி.ஐ.ஜி.யின் சிறப்பு தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் தலைமையில் தனிப்பிரிவு போலீசார் மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் அதிரடி சோதனை செய்தனர். அப்போது பேரையூர் முக்குசாலை பகுதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் 25 மூடைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. தனிப் பிரிவு போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். 25 மூடைகளில் 354 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் இருந்தது. குட்கா பொருட்கள் வைத்து இருந்ததாக பேரையூர் குறிஞ்சி நகரை சேர்ந்த சம்சுதீன் (வயது 53) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story