எருமப்பட்டி அருகே பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய வாலிபர் கைது

எருமப்பட்டி அருகே  பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய வாலிபர் கைது
x

எருமப்பட்டி அருகே பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய வாலிபர் கைது

நாமக்கல்

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே உள்ள அலங்காநத்தம் பிரிவை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் மனோஜ் (28) என்பவர் அடிக்கடி செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதில் ஆபாசமாகவும், மிரட்டும்படியும், மன ரீதியாக துன்புறுத்தும் வகையில் எழுதியதாக தெரிகிறது. இதுகுறித்து அந்த பெண் கடந்த மாதம் எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜை தேடி வந்தனர். இந்த நிலையில் மனோஜ் அலங்காநத்தம் பிரிவில் இருப்பதாக தகவல் கிடைத்தது. பின்னர் போலீசார் அங்கு சென்று மனோஜை கைது செய்தனர்.

Next Story