புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது
x

சிங்கம்புணரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர். வார்டு கவுன்சிலர் தப்பி ஓடிவிட்டார்.

புகையிலை பொருட்கள்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஐ.ஜி. மற்றும் எஸ்.பி. குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சிங்கம்புணரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.

அப்போது அப்துல் ரகுமான், சர்புதீன், சிங்கம்புணரி பேரூராட்சி வார்டு 11-வது கவுன்சிலர் சங்கர், சின்னையா, தங்கராஜ், திருப்பதி, கோபாலகிருஷ்ணன், திருப்பதி ஆகியோர் கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

7 பேர் கைது

இவர்களிடம் இருந்து சுமார் 40 கிலோ மதிப்புள்ள 4 ஆயிரத்து 63 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் 7 பேரை கைது செய்தனர். கவுன்சிலர் சங்கர் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story