மதுரையில் 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 5 பேர் கைது

மதுரையில் 6 டன் ரேஷன் அரிசியை லாரியில் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் 6 டன் ரேஷன் அரிசியை லாரியில் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடு பவர்களை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரையில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சிலைமான் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட்டனர்.
அப்போது லாரியில் 115 மூடைகளில் 50 கிலோ வீதம் வைக்கப்பட்டு இருந்த சுமார் 6 டன் ரேஷன் அரிசி சிவகங்கை மாவட்டத்திற்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் லாரியுடன் அதில் இருந்து கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
5 பேர் கைது
இதனை தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த சுமை தூக்கும் தொழிலாளர்களான மதுரை, ராமநாதபுரத்தை சேர்ந்த கோவிந்தன் (வயது38), சபரி (37), முத்துப்பாண்டி (39), முருகன் (30), சரவணன் (31) ஆகியோரை கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளிகளான ராமமூர்த்தி, பரமக்குடியை சேர்ந்த அரிசி ஏஜெண்டு பாபு என்பவரும் தலைமறைவாக உள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவ உள்ள 2 பேரை தேடிவருகின்றனர்.