சேலம் தாதகாப்பட்டியில் விபசார புரோக்கர்கள் கைது

சேலம் தாதகாப்பட்டியில் விபசார புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் வீரபாண்டியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பட்டீஸ்வரன் (வயது 30). இவர் மோட்டார் சைக்கிள் ஷோரூம் ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இவர் தாதகாப்பட்டி பில்லுக்கடை பகுதியில் உள்ள வங்கி அருகே ஒரு வேலை விஷயமாக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆணும், பெண்ணும் பட்டீஸ்வரனிடம் தனியாக அழைத்து பேச்சு கொடுத்து, தங்களிடம் அழகான இளம்பெண்கள் இருப்பதாகவும், ரூ.2 ஆயிரம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என்றும் கூறி அவரை விபசாரத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார், எருமாபாளையம், பால்காரர் தெரு பகுதியைச் சேர்ந்த விபசார புரோக்கர்களான சீனிவாசன் (32), ரம்யா (31) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.