மேலூர் துணை தாசில்தார்-இடைத்தரகர் கைது


மேலூர் துணை தாசில்தார்-இடைத்தரகர் கைது
x

ரூ.20 ஆயிரம் லஞ்சம் தொடர்பாக மேலூர் துணை தாசில்தார் மற்றும் இடைத்தரகர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

மேலூர்,

ரூ.20 ஆயிரம் லஞ்சம் தொடர்பாக மேலூர் துணை தாசில்தார் மற்றும் இடைத்தரகர் கைது செய்யப்பட்டனர்.

சான்றிதழுக்கு லஞ்சம்

மதுரை மாவட்டம் மேலூர் கருத்தபுலியன்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி பிரபு. இவர் வங்கி ஒன்றில் அவரது மனைவி பெயரில் கடன் வாங்குவதற்காக சொத்து மதிப்பு சான்றிதழ் பெற மேலூர் தாலுகா அலுவலகத்தை அணுகி உள்ளார். அப்போது அவரிடம் சான்றிதழ் வழங்க ரூ..20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பிரபு, மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை பிரபுவிடம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

கைது

லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு சத்யசீலன், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்பிரபு, அம்புரோஸ், சூர்யகலா, பாரதிபிரியா மற்றும் குமரகுரு ஆகியோர் மேலூர் தாலுகா அலுவலகத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

தாலுகா அலுவலகத்தில் பிரபுவிடம் லஞ்ச பணத்தை இடைத்தரகர் மூக்கன் என்பவர் வாங்கியுள்ளார். இதையடுத்து மூக்கனையும், துணை தாசில்தார் மணிகண்டனையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் இருவரிடமும் தீவிர விசாரணை நடந்தது. இந்த நடவடிக்கை மேலூர் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story