சேலம் புதிய பஸ்நிலையத்தில் வாலிபரிடம் பணம் பறித்த திருநங்கை கைது


சேலம் புதிய பஸ்நிலையத்தில் வாலிபரிடம் பணம் பறித்த திருநங்கை கைது
x

சேலம் புதிய பஸ்நிலையத்தில் வாலிபரிடம் பணம் பறித்த திருநங்கை கைது செய்யப்பட்டார்.

சேலம்

சேலம் பள்ளப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 23). இவர் நேற்று முன்தினம் வெளியூர் செல்வதற்காக புதிய பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருநங்கை ஒருவர், பாலாஜியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.650-ஐ பறித்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் அம்மாபேட்டை காலனி தாதம்பட்டி ரோடு பகுதியை சேர்ந்த திருநங்கையான கொடி என்ற சித்தலிங்கம் (24), பாலாஜியிடம் பணத்தை வழிப்பறி செய்தது தெரியவந்தது. இதையடுத்து திருநங்கையை போலீசார் கைது ெசய்து அவரிடம் இருந்து பணம், கத்தியை பறிமுதல் செய்தனர்.


Next Story