தாளவாடி அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது- ரூ.39 ஆயிரம் பறிமுதல்
தாளவாடி அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது- ரூ.39 ஆயிரம் பறிமுதல்
தாளவாடி
தாளவாடி அடுத்த மல்லன்குழி கிராமத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் மல்லன்குழி கிராமத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தோட்டத்து வீட்டில் 11 பேர் உட்கார்ந்து கொண்டு சூதாடிக்கொண்டிருந்ததை கண்டனர். உடனே அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர்கள் மல்லன்குழியை சேர்ந்த பிரசாந்த் (வயது 29), ஜெகதீஷ் (50), ராமண்ணா (45), பிரபாகரன் (23), தோவப்பா (35), கல்மண்புரம் கிராமத்தை சேர்ந்த மல்லேதேவர் (40), தமிழ்புரம் கிராமத்தை சேர்ந்த சித்தமல்லு (35) உள்பட 11 பேர்,' என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 11 பேரை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூ.39 ஆயிரத்து 260-ம், 5 இரு சக்கர வாகனங்கள், 9 செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.