பர்கூர் அருகே பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் கைது
பர்கூர் அருகே பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் கைது
பர்கூர்:
பர்கூர் அடுத்த பாசிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் விஜயா (வயது 30). இவர் கடந்த ஜூன் மாதம் 22-ந் தேதி பர்கூருக்கு மொபட்டில் வந்தார். பின்னர் மொபட்டில் அவரது சகோதரி செல்வியுடன் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். கொண்டப்பநாயனப்பள்ளி அருகே உள்ள காந்திநகர் பகுதியில் சென்றபோது அவர்களை மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் விஜயா கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார்.
இதுகுறித்து விஜயா கொடுத்த புகாரின்பேரில் பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், போலீசார் சுரேஷ், பிரதாப், குமார் மற்றும் போலீசார் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தியதில் விஜயாவிடம் நகையை பறித்தது கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்கிற கான் (29) என தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் பதுங்கி இருந்த சுரேசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 பவுன் நகை மற்றும் மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.