இலங்கை கடலில் 430 கிலோ கஞ்சாவுடன் 5 பேர் கைது


இலங்கை கடலில் 430 கிலோ கஞ்சாவுடன் 5 பேர் கைது
x

ராமேசுவரம் தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக கடத்தி சென்றபோது இலங்கை கடலில் 430 கிலோ கஞ்சாவுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக கடத்தி சென்றபோது இலங்கை கடலில் 430 கிலோ கஞ்சாவுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாட்டுப்படகு

ராமேசுவரத்திற்கு மிக அருகாமையில் உள்ளது இலங்கை கடல் பகுதி. ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, பீடிஇலை, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கடத்துவது தொடர்கிறது. இந்த நிலையில் இலங்கை கல்பட்டி கடல் பகுதியில் நேற்றுமுன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர் தமிழகத்தை சேர்ந்த ஒரு மீன்பிடி நாட்டு படகு ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த நாட்டுப்படகில் சுமார் 430 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து தமிழகத்தை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளனர். இந்த 5 பேரில் 3 பேர் தங்கச்சி மடத்தை சேர்ந்தவர்கள் என்பதும் மற்ற 2 பேர் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

விசாரணை

இதையடுத்து படகு மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் 5 பேரிடமும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த கஞ்சா பாம்பன் அல்லது மண்டபம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்தோ அல்லது தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் இருந்தோ ஏற்றி இலங்கைக்கு கடத்தி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கடலோர மற்றும் கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல் தொடரும் நிலையிலும் கடத்தலை தடுக்க முடியாமல் கடலோர காவல் படை மற்றும் கடலோர போலீசாரும் திணறி வருகின்றனர்.


Next Story