கஞ்சா விற்ற 4 பேர் கைது


கஞ்சா விற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 16 Sep 2022 6:45 PM GMT (Updated: 16 Sep 2022 6:46 PM GMT)

திருப்புவனம் அருகே கஞ்சா விற்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே கஞ்சா விற்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கஞ்சா விற்பனை

திருப்புவனத்தில் உள்ள மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலை பகுதியிலிருந்து நரிக்குடி செல்லும் சாலை அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருப்புவனம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசுப்பிரமணி மற்றும் போலீசார் அங்கு ரோந்து சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 6 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

4 பேர் கைது

பிடிபட்ட 4 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் புலிப்பாண்டி என்ற முத்துக்குமார் (வயது 21), பாலமுருகன் என்ற கவட்டை பாலா (27), புவனேஸ்வரன் என்ற குணால் (22), பழனி (29) ஆகியோர் என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 800 கிராம் கஞ்சா மற்றும் ஆயுதங்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.Next Story