சிறுமியை கடத்திய வடமாநில வாலிபர் போக்சோவில் கைது


சிறுமியை கடத்திய வடமாநில வாலிபர் போக்சோவில் கைது
x

சிறுமியை கடத்திய வடமாநில வாலிபர் போக்சோவில் கைது

நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையத்தை அடுத்த வெப்படையில் உள்ள ஒரு நூல் மில்லில் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த குட்டு (வயது 21) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குட்டு மில்லில் வேலை செய்த வெப்படை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாட்னாவுக்கு கடத்தி சென்று விட்டார். இதுகுறித்து சிறுமியின் தந்தை வெப்படை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பாட்னாவுக்கு சென்று குட்டு, சிறுமியை அழைத்து வந்தனர். இதையடுத்து போலீசார் சிறுமியை கடத்திய குட்டு மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


Next Story