மண் கடத்தியவர் கைது


மண் கடத்தியவர் கைது
x

ஊத்தங்கரை அருகே மண் கடத்தியவரை போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

சாமல்பட்டி போலீசார் கெரிகேப்பள்ளி ரெயில்வே பாலம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை போலீசார் சோதனை செய்தனர். கெரிகேப்பள்ளியில் இருந்து சாமல்பட்டிக்கு சென்று கொண்டிருந்த அந்த லாரியில் 4 யூனிட் மண் கடத்தப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து மண் கடத்தலில் ஈடுபட்டதாக, போச்சம்பள்ளி தாலுகா கொத்தபள்ளனூரை சேர்ந்த மணிவண்ணன் (வயது 31) என்பவரை கைது செய்த போலீசார், லாரியையும் பறிமுதல் செய்தனர்.


Next Story