வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை கணவர் உள்பட 2 பேர் கைது


வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால்  இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை   கணவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 Sept 2022 12:15 AM IST (Updated: 18 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராயக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவருடைய கணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

ராயக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவருடைய கணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள தொட்டதிம்மனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகன் கோவிந்தராஜ் (வயது 26). இவருக்கும், பெங்களூருவை சேர்ந்த ராபியா மகள் கிருஷ்ணவேணி (24) என்பருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த கிருஷ்ணவேணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வரதட்சணை

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் கிருஷ்ணவேணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக கிருஷ்ணவேணியின் தாய் ராயக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் கிருஷ்ணவேணியை வரதட்சணை வாங்கி வரவில்லை என்று கூறி மருமகன் கோவிந்தராஜ், அவரது பெரியம்மா செல்வி ஆகியோர் சேர்ந்து அடிக்கடி துன்புறுத்தியதாகவும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

உதவி கலெக்டர் விசாரணை

இதையடுத்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜ் மற்றும் அவருடைய பெரியம்மா செல்வி ஆகியோரை கைது செய்து தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் திருமணமான 6 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் வழக்கு தொடர்பாக ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story