மங்களபுரம் அருகே மாரியம்மன் கோவில் உண்டியல் உடைப்பு; 2 வாலிபர்கள் கைது

மங்களபுரம் அருகே மாரியம்மன் கோவில் உண்டியல் உடைப்பு; 2 வாலிபர்கள் கைது
நாமக்கல்
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரம் நெடுஞ்சாலை ஒண்டிக்கடை கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன் திறந்தவெளியில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயன்றதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்தனர்.
பின்னர் அப்பகுதி மக்கள் 2 பேரையும் பிடித்து மங்களபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயன்றது ஒடுவன்குறிச்சியை சேர்ந்த சர்மா (வயது 26), அத்தனூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் 2 பேரையும் கைது செய்தார்.
Related Tags :
Next Story






