வெண்ணந்தூர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைக்காரர்கள் கைது
வெண்ணந்தூர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைக்காரர்கள் கைது
நாமக்கல்
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வெண்ணந்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் வெண்ணந்தூர் மற்றும் அத்தனூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது அளவாய்பட்டியில் தனசிங் என்பவரது மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அத்தனூரில் சரவணன் (60) என்பவரது டீக்கடையில் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து தனசிங், சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்
Related Tags :
Next Story