பென்னாகரத்தில் மது விற்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது 567 பாட்டில்கள் பறிமுதல்


பென்னாகரத்தில்  மது விற்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது  567 பாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பென்னாகரத்தில் மது விற்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது 567 பாட்டில்கள் பறிமுதல்

தர்மபுரி

பென்னாகரம்:

பென்னாகரம் ராஜீவ் நகர் பகுதியில் உள்ள வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பென்னாகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் மற்றும் தனிப்படை போலீசார் ராஜீவ் நகர் பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த கமலேசன் மனைவி லட்சுமி (வயது 57), அவருடைய மகன் ரவி (39), மருமகள் கிருஷ்ணம்மாள் (34) மற்றும் அதே பகுதியை சேர்ந்த மாது மனைவி மகேஸ்வரி (40) ஆகியோர் தங்களது வீடுகளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 567 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் லட்சுமி, கிருஷ்ணம்மாளை கைது செய்தனர். மேலும் ரவி, மகேஸ்வரி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல் தாசம்பட்டியை சேர்ந்த முனிராஜ் (50), அண்ணா நகரை சேர்ந்த இளங்கோவன் (38) ஆகியோரும் மதுபாட்டில்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story