பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள இளமனூர் பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் ராமதாஸ் (வயது65). இவர் . காட்டூரணி இரட்டை ஆலமரம் அருகில் சென்றபோது அவரை வழிமறித்த 2 பேர் மிரட்டி அவரின் சட்டை பையில் வைத்திருந்த 750 ரூபாயை பறித்து சென்றுவிட்டனர். ராமதாஸ் தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அவர்கள் விரைந்து வந்து பணம் பறித்த 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து காட்டூரணி தங்கப்பா புரத்தை சேர்ந்த தவசி மகன் சீனிவாசன் (32), தேவமாரி மகன் சூர்யபிரபு (30) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 750 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story