பள்ளிபாளையத்தில் வடமாநில வாலிபர்களிடம் பணம் பறித்த 6 பேர் கைது


பள்ளிபாளையத்தில்  வடமாநில வாலிபர்களிடம் பணம் பறித்த 6 பேர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையத்தில் வடமாநில வாலிபர்களிடம் பணம் பறித்த 6 பேர் கைது

நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் ஓடப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 42). தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை வேலை முடிந்து ஓடப்பள்ளி கதவணை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு வயலில் சத்தம் கேட்டதை கேட்டு அங்கு சென்று பார்த்தார். அங்கு 2 வடநாட்டு வாலிபர்களை 6 பேர் சேர்ந்து தாக்கி கொண்டிருந்தனர்.

இதை குமார் தட்டிகேட்டபோது, அவருக்கு 6 பேரும் கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து குமார் தனது நண்பர்களுக்கு போன் செய்ததின் பேரில் நண்பர்கள் 4 பேர் அங்கு உடனடியாக சென்று 6 பேரையும் பிடித்து வைத்ததுடன், பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில், நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வடமாநில வாலிபர்களை தாக்கி பணம் பறித்ததாக திருச்செங்கோட்டை சேர்ந்த சோமசுந்தரம் (32), ஈரோடு கார்த்தி (33), செல்வராஜ் (34), மயிலானந்தன் (24), சந்திரமோகன் (48), அர்ஜூன் (24) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story