பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது 2 மொபட் பறிமுதல்


பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது  2 மொபட் பறிமுதல்
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது 2 மொபட் பறிமுதல்

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே கொளக்காட்டுப்புதூரில் உள்ள ஒரு மறைவிடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த பொத்தனூரை சேர்ந்த வரதராஜன் (வயது 36), வெங்கரையை சேர்ந்த முரளி (34), சத்தியராஜ் (34), பாண்டமங்கலத்தை சேர்ந்த கோபி (40), லோகேஸ்வரன் (26) மற்றும் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை சேர்ந்த விஜய் (30) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 மொபட்டுகள் மற்றும் ரூ.500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story