பெண் வக்கீலை தாக்கிய வாலிபர் கைது


பெண் வக்கீலை தாக்கிய வாலிபர் கைது
x

பெண் வக்கீலை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை

திருப்பரங்குன்றம்,

மதுரை விரகனூரை அடுத்த ஐராவதநல்லூரை சேர்ந்தவர் ஆதி சுகன்யா (வயது26). திருநகரில் வசித்து வருபவர் கார்த்திக் (28). இவர்களுக்கு கடந்த 2000-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஆதிசுகன்யா, கார்த்திக் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆதிசுகன்யா புகாரின்பேரில் திருப்பரங் குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அனைத்து மகளிர் காவல்நிலைய வளாகத்தில் மதுரையை சேர்ந்த பெண் வக்கீல் நீதிமலர் நின்று இருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திக் வக்கீல் நீதிமலரைதரக்குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இருதரப்பினர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.


Next Story