பரமத்திவேலூரில் ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது லாரி பறிமுதல்


பரமத்திவேலூரில்  ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது  லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூரில் ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது லாரி பறிமுதல்

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

ரேஷன் அரிசி கடத்தல்

பரமத்திவேலூர் அருகே உள்ள வெட்டுகாட்டுப்புதூரில் சிலர் ரேஷன் அரிசி கடத்துவதாக நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள வெட்டுக்காட்டு புதூர் மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 15 சாக்கு மூட்டைகளில் 750 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது

இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தி வந்த பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தை சேர்ந்த சங்கர் மகன் மணிகண்டன் (வயது 39), புதுச்சத்திரம் கல்யாணி பகுதியை சேர்ந்த பழனிவேல் (60), பரமத்திவேலூர் அருகே உள்ள கோட்டணம்பாளையத்தை சேர்ந்த பெரியசாமி மகன் ராஜேந்திரன் (30), அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன் (23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story