எருமப்பட்டி அருகே கிராவல் மண் வெட்டி கடத்திய டிரைவர் கைது


எருமப்பட்டி அருகே  கிராவல் மண் வெட்டி கடத்திய டிரைவர் கைது
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:47 PM GMT)
நாமக்கல்

எருமப்பட்டி:

எருமப்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட புதுக்கோட்டை ஊராட்சி கெட்டுமேடு பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டு வருவதாக புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) தமிழ்ச்செல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற வருவாய் துறையினர் அந்த வழியாக சென்ற டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்தனர். அப்போது டிப்பர் லாரியில் 4 யூனிட் கிராவல் மண் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து டிரைவரிடம் வருவாய் துறையினர் நடத்திய விசாரணையில் அரசு புறம்போக்கு நிலத்தில் கிராவல் மண் வெட்டி எடுத்து கடத்தி விற்பனை செய்வது தெரியவந்தது. பின்னர் பரமத்தி வட்டம் வாழவந்தியை சேர்ந்த லாரி டிரைவர் பிரகாஷ்ராஜ் (வயது 30) என்பவரை கைது செய்த போலீசார் அவருக்கு உடந்தையாக இருந்த தாமரைச்செல்வன் என்பவரை தேடி வருகின்றனர்.


Next Story