போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
x

போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி தலைமையிலான போலீசார் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக தலைக்கவசம் அணியாமல் வந்த ராமநாதபுரம் கோட்டைமேடு கோழிக்கூட்டு தெருவை சேர்ந்த பக்கிரிசாமி மகன் பார்த்தசாரதி (வயது37) என்பவரின் வாகனத்தை நிறுத்தி தலைக்கவசம் அணியாதது குறித்து கேட்டனர். அதற்கு ஆத்திரமடைந்த பார்த்தசாரதி போலீசாரை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதோடு உடைகளை கழற்றி அரைநிர்வாணமாக தகராறில் ஈடுபட்டு அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தாராம். மேலும், கத்தரிகோலை காட்டி என்மீது கேஸ் போட்டால் போலீசார் அனைவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டினாராம். இதுகுறித்து ஆசைத்தம்பி ராமநாதபுரம் பஜார் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பார்த்தசாரதியை கைது செய்தனர்.


Next Story