கோவில் உண்டியலை திருடியவர் கைது


கோவில் உண்டியலை திருடியவர் கைது
x

கோவில் உண்டியலை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

திருப்புல்லாணி,

திருப்புல்லாணி அருகே உள்ள ரெகுநாதபுரம் மேலவலசை பகுதியில் தாந்தூரணி தர்மமுனீஸ்வரர் கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக மேலவலசை பஞ்சவர்ணம் மகன் பூமிநாதன் (வயது52) என்பவர் இருந்து வருகிறார். இவர் வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இரவில் கோவில் உட்பகுதியில் சத்தம் கேட்டு பூமிநாதன் விரைந்து வந்துள்ளார். அப்போது அங்கு வாலாந்தரவை அம்மன்கோவிலை சேர்ந்த ராமு மகன் சத்தியநாதன் (32) என்பவர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பூமிநாதன் உண்டியலுடன் சத்தியநாதனை மடக்கி பிடித்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருப்புல்லாணி போலீ சார் சத்தியநாதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே உண்டியல் திருடிய வழக்கு உள்ளதும் சிறை சென்று வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story