நாமக்கல் அருகே லாரி டிரைவரிடம் வழிப்பறி; வாலிபர் கைது
நாமக்கல்
திருச்சி மாவட்டம் பழனிகவுண்டனூரை சேர்ந்தவர் மாதேஸ்வரன். லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் நாமக்கல் அருகே உள்ள சிங்கிலிபட்டி பிரிவு ரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி மாதேஸ்வரனிடம் ரூ.1,000 வழிப்பறி செய்துவிட்டு, மற்றொரு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து மாதேஸ்வரன் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அண்ணா நகரை சேர்ந்த குமார் மகன் பூபாலகிருஷ்ணனை (வயது 26) கைது செய்தனர்.
Related Tags :
Next Story