கோவில்களில் மணிகளை திருடிய 2 பேர் கைது
கோவில்களில் மணிகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள கலையூர் கருமலையான் கோவில், ஆனைகட்டி முனியப்பன் சுவாமி கோயில், இடையத்தூர் தர்ம முனிஸ்வரர் கோயில், மீனாட்சிபுரம் முனியப்ப சுவாமி கோயில், கேளல் காளியம்மன் கோவில், புழுதிக்குளம் கோட்டை முனீஸ்வரர் கோயில், சிவகங்கை மாவட்டம் சின்ன கண்ணனூர் கோவில், அ.நெடுங்குளம் முனியப்ப சாமி கோயில், குஞ்சு முனியசாமி கோயில் ஆகியவற்றில் இருந்த 619 கிலோ எடை கொண்ட 400-க்கும் மேற்பட்ட கோவில் முன்பு கட்டப்பட்டு இருந்த வெண்கல மணிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கீழசிவங் குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (வயது38) வாலாங்குடி கிராமத்தைச் சேர்ந்த நல்லூர் சேவுகன் (45) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 403 மணிகள் கைப்பற்றப்பட்டன.
Related Tags :
Next Story