பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்
தொண்டி,
தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜா. இவரது மனைவி நதியா (வயது 36). இவரிடம் திருப்பாலைக்குடி காந்திநகர் பகுதியை சேர்ந்த சம்பத்குமார் (20) என்பவர் 7½ பவுன் தங்கத்தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து நதியா தொண்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திருடிச் சென்ற 7½ பவுன் தங்கச்செயினை திருப்பாலைக்குடி சுடுகாட்டுப் பகுதியில் புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் தங்கச் செயினை கைப்பற்றினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
Related Tags :
Next Story