பெண்ணிடம் பணம் திருடியவர் கைது
பெண்ணிடம் பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
கேணிக்கரை,
உச்சிப்புளி கும்பரம் அருகே உள்ள பூசாரி வலசையை சேர்ந்தவர் வேணுகோபால் மனைவி தனலெட்சுமி (வயத25). இவர் அவரின் தங்கை புவனேஸ்வரிக்கு குழந்தை பிறந்து உள்ளதால் ராமநாதபுரம் ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். குழந்தையை பார்த்துவிட்டு டவுன்பஸ்சில் ராமநாதபுரம் பஸ்நிலையத்தில் இருந்து கும்பரம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி தனலெட்சுமி கைப்பையில் இருந்த ரூ.ஆயிரம் பணத்தை பெண் ஒருவர் திருடிக்கொண்டு ஓட்டம் பிடிக்க முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தனலெட்சுமி அந்த பெண்ணை பிடித்து கண்டக்டரிடம் தகவல் தெரிவித்து கேணிக்கரை போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் திருப்பூர் கண்ணம்பாளையம் கிட்டான் மனைவி லெட்சுமி (வயது68) என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.