சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது


சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட  2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்  டிரைவர் கைது
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரேஷன் அரிசி பறிமுதல்

நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி கடத்தல்காரர்களை கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் நாமக்கல் அருகே உள்ள அலங்காநத்தம் பிரிவு பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 2,150 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.

டிரைவர் கைது

இதையடுத்து அந்த வாகனத்தை ஓட்டி வந்த பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தேனூர் பகுதியை சேர்ந்த டிரைவர் சக்திவேல் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் ரேஷன் அரிசி மூட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்படுகின்றன? இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story