கஞ்சா வைத்திருந்தவர் கைது


கஞ்சா வைத்திருந்தவர் கைது
x

கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

மேச்சேரி:

நங்கவள்ளி அருகே சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக நங்கவள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்ற போது தப்பி செல்ல முயன்றவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர், ஜலகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (வயது 22) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. உடனே போலீசார் தியாகராஜனை கைது செய்து அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story